கனமழை: சென்னை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை – பல்கலை., தேர்வுகள் ரத்து
சென்னை: விடிய விடிய பெய்து வரும் தொடர் மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை கொட்டிவருகிறது. நேற்று மாலை முதல் சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவாருர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு மட்டும்
இதேபோல், நாகை, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

சென்னை பல்கலைக்கழக தேர்வு ரத்து
மேலும், தொடர் மழை காரணமாக சென்னையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு
அதே நேரம், அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் வழக்கம்போல் இன்று நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு
இதனிடையே அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு நோக்கி, தமிழகம் அருகே நகர்ந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு மழை
தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவே நிலை கொண்டு உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளின் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழை
உள் தமிழகம், மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னை மாநகரைப் பொருத்தவரையில் ஒரு சில நேரங்களில் நகரில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர் இன்று காலை 9 மணி முதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications