வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடமேற்கு வங்கக்கடலில் கடலோரப்பகுதியில் காற்றழுத்த மண்டலமாக இருந்தது. அது மேற்கு வங்காளத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளது.
அது இன்று வங்காளதேச கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கும் தமிழ்நாட்டுக்கு எந்த வித சம்பந்தமும் இல்லை.
சென்னையை பொருத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications