மழை, வெள்ள பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம்: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
சென்னை: இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மயிலாப்பூர் பகுதியில் 700 குடும்பங்களுக்கு தமாகா சார்பில் குடை, மழை கோட், அரிசி, போர்வை மற்றும் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் ஆகியவற்றை ஜி.கே.வாசன் வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து, செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறுகையில், தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உடை, தங்குமிடம் ஆகியவற்றை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செய்துதர வேண்டும்.

தண்ணீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க 24 மணி நேர மருத்துவ சேவை அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து வெள்ள நிவாரண உதவிகளை முறையாக வழங்க வேண்டும். இதில் அரசியல் தலையீடு கூடாது.
இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புக்கு முன் எச்சரிக்கை எடுக்காததே காரணம். இதுவரை மத்திய அரசு இடைக்கால நிவாரணம் ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது. உடனே இடைக்கால நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும்.
மேலும், மழை மற்றும் வெள்ள நிவாரண உதவிகள் வழங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து கண்காணிப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற தருணங்களில் பொது மக்களுக்கு உதவுவது ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தலையாய கடமை ஆகும். எனவே, அந்த வகையில் தமாகா சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications