குற்றாலத்தில் மீண்டும் சாரல் மழை... அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு
குற்றாலம்: குற்றாலத்தில் மீண்டும் சாரல் மழை பெய்து வருவதால் அதன் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் கடந்த 30-ஆம் தேதியே தொடங்கிய தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் ஜூன் 1ஆம் தேதிமுதல் தலைகாட்டத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த 1-ஆம் தேதி மாலை முதல் 3-ஆம் தேதி அதிகாலை வரை பெய்தது.

இதனைத்தொடர்ந்து குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவி களில் தண்ணீர் வரத்து அதிகரித்து 2-ஆம் தேதி இரவுமுதல் ஐந்தருவி, குற்றாலம் மெயின் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. 3-ஆம் தேதி காலைமுதல் இன்றுகாலை வரை சாரல்மழை இல்லாமல் அருவிகளில் தண்ணீர்வரத்து வெகுவாக குறைந்தது.
இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் கூட்டமும் அதிகரித்தது.அருவியில் விழும் நீரும் குறைவாக இருந்தது. குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததைத் தொடர்ந்து சாரல் மழையில்லாததால் வேதனையடைந்தனர்.
அப்போது மதியம் 1 மணிமுதல் வனப்பகுதியிலும், ஊருக்குள்ளும் சாரல்மழை கொட்டத்தொடங்கியுள்ளது. மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர்வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கும் என்று நம்பபடுவதால் வியாபாரிகள் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சாரல்மழை தொடர்ந்தால் அருவிகளில் ஆனந்த குளியல் போடலாம் என சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications