சென்னையில்... நடுவுல கொஞ்சம் மழையைக் காணோம்...!
சென்னை: சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து பெய்து வந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் மழையைக் காணவில்லை.
சும்மா சொல்லக் கூடாது. நல்ல மழை பெய்தது இன்று. பெரிய மழையாகவும் இல்லாமல், வெறும் தூறலாகவும் இல்லாமலும், நிறுத்தி நிதானமாக பெய்த மழையால் பூமியே குளிர்ந்து போய் விட்டது.

இருப்பினும் சில பகுதிகளில் பெரிய மழை இல்லை. வெயிலும் அடித்தது. காலையில் ஆரம்பித்து பிற்பகல் வரை நகர் மற்றும் புறநகர்கள் பலவற்றை நனைத்த மழை தற்போது நின்று விட்டது.
டாஸ்மாக் கடைக்குள் போய் விட்டு வந்த குடிகாரர்கள் போல, வானமும் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது.
முன்னதாக வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 24 மணி நேரத்திற்கு கன மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் அறிவித்திருந்தது
சென்னையில் இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலத்தில் போதிய மழை பெய்யவில்லை. வந்த 3 புயல்களும் கூட திசை மாறி ஆந்திரா பக்கம் போய் விட்டதால் சென்னைக்கும், தமிழகத்திற்கும் இதுவரை போதிய மழை கிடைக்காத நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் தற்போதைய புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
சென்னையில் கடந்த பல நாட்களாகவே மழை. சில நாட்களாக நல்லவெயிலைக் காண முடிந்தது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.
ஆனால் நேற்று முதல் நிலைமை மாறியது. நல்ல குளுமை குடியேறியது. இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. நேற்று இரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது.
மழை 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று என்று வானிலை மையம் அறிவித்துளள்ளளதால் மக்கள் நம்பிக்கையுடன்
விடுமுறையை எதிர்பார்த்து ஏமாந்த மாணாக்கர்கள்
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதாக செய்திகள் வந்தவுடனேயே பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள் பலர் ஆவலாக இருந்தனர். ஆனால் காலை பள்ளிக்குப் புறப்படும் வரை அப்படி ஒரு அறிவிப்பே வராததால் வேறு வழியில்லாமல் பள்ளிக்குப் போனார்கள் மாணவர்கள்.
ஆனால் அவர்கள் போன கொஞ்ச நேரத்திலேயே மழை வந்தது செம காமெடி...!
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications