சென்னையில் ஜிலுஜிலுன்னு நீடிக்கும் மழை.. ஊரே "கூல்" ஆனது.. போக்குவரத்து "ஜாம்" ஆனது!
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்துள்ளனர்.
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே கன மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, வளசரவாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், சோழிங்கநல்லூர், மேடவாக்கம், முகப்பேர் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

மேலும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், மதுராந்தகம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலையின் இருபுறமும் மழைநீர் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் இரு சக்கர வாகனம் , நான்கு சக்கரம் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்கி தவித்தன. இதேபோல் தமிழகத்தின் சேலம், திண்டுக்கல், விருதுநகர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் 7 மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்ததால் அங்குள்ள ஜம்பு ஏரி நிரம்பியது. விழுப்புரத்தில் விடிய விடிய மழை பெய்ததால் விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் சேலம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு











Click it and Unblock the Notifications