திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது
சென்னை: சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் பிற்பகல் முதல் இரவு வரை, நான்கு மணி நேரத்தில், 8.5 செ.மீ., மழை கொட்டியது. மழை நீர் வௌ்ளமென சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. அண்ணா சாலையில் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டனர்.

வடபழனி,கோயம்பேடு,ஈக்காட்டுத்தாங்கல், சூளைமேடு ,நந்தனம், தியாகராயநகர், கிண்டி. சைதாப்பேட்டை, பாரிமுனை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. அதேபோல் புறநகர் பகுதிகளான, தாம்பரம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கி நின்றது. தொடர்ந்து பெய்த மழைக்கு தண்ணீர் செல்ல முடியாமல் பள்ளமான பகுதிகளில் தேங்கி நின்றது. இதையடுத்து இந்த மழைநீர் கருணாநிதியின் வீட்டின் உள்ளே புகுந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications