மழை குறையப் போகிறதாம்... காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மறைஞ்சு போச்சாம்!

சென்னைக்கு தென் கிழக்கே வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் நாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது.
இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக நாகை, திருவாரூர், கடலூர், மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையிலும் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல இடங்கள் வெள்ளக் காடானது. கரை கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மறைந்து விட்டது.
மேலும் நேற்றும் இன்றும் கூட சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காலையில் நல்ல மழை பெய்தது. ஆனால் தற்போது இந்த மழை நின்று விட்டது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
லட்சத்தீவு பக்கம் நேற்று நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தரை பக்கமாக சென்று தற்போது மறைந்து விட்டது. இதன் காரணமாக உருவான மேலடுக்கு சுழற்சி ஆங்காங்கே மேகமூட்டமாய் நிற்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். பின்னர் படிப்படியாக மழை குறையும். இனி புதிதாக காற்றழுத்த தாழ்வு வரும்போது மழையை எதிர்பார்க்க முடியும் என்றார்.
காத்திருப்போம் அடுத்த மழைக்கு.. கையில் குடையோடு!
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications