ஹேப்பி நியூஸ்...சென்னையில் மிதமான மழை தொடருமாம்.. வானிலை மையம் ஜில் ஜில் அறிவிப்பு!
Recommended Video

சென்னை: சென்னையில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் தொடங்கும் மழை விடிய விடிய தொடருகிறது.
இதனால் சென்னை முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது. இதமான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் மழை நீடிக்கும்
இந்நிலையில் ஆந்திரத்தையொட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் மிதமான மழை தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

வடதமிழகத்தில் மழை
மேலும் அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

பலத்த காற்று வீசும்
மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் இன்று மாலை முதல் 45 முதல் 55 கிமீ வேகத்தில் கடற்பகுதியில் காற்று வீசும் என்றும் நாளை முதல் 65 முதல் 75 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

கடலுக்கு செல்ல வேண்டாம்
இதன் காரணமாக மீனவர்கள் அந்தமான், தெற்கு மற்றும் மத்திய வங்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக காஞ்சிபுரத்தில் 5 சென்டி மீட்டர் மழையும் செம்பரம்பாக்கம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
{document1}
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications