தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் மழை பெய்யலாம்... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை : தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி முடிவடைந்த பிறகும் கோடையின் தாக்கம் தொடர்ந்து வந்தது. இதற்கிடையே கடந்த வெள்ளியன்று கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கியதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதுவரை எட்டுக்கும் அதிகமானோர் மழைக்குப் பலியாகியுள்ளனர். சென்னையின் சில இடங்களில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியதாவது :
மத்திய கிழக்கு, தென் கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், மற்றும் ஓரிரு இடத்தில் மழை பெய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் காஞ்சிபுரம், காட்டுக்குப்பத்தில் 7 செ.மீ. மழையும், சென்னை கொளப்பாக்கம், கேளம்பாக்கம், செம்பரம்பாக்கம் பகுதியில் 6 செ.மீ மழையும் மற்றும் விமான நிலையத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications