கடலோர மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு: ரமணன் எச்சரிக்கை
சென்னை: லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால், அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் புதியதாக புயல் ஏதும் உருவாக வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வடகிழக்குப் பருவமழையின் திவிரத்தால் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 10 நாட்களும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளிக்கின்றன.

வெள்ளம் வடிந்து இயல்பு நிலையில் திரும்பிய நிலையில் புதன்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறினார். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் தெரிவித்த ரமணன், கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவித்தார்.
லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார். வங்கக் கடலில் புதியதாக புயல் ஏதும் உருவாக வாய்ப்பில்லை என்றும் கூறிய ரமணன், வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இருந்து மழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications