சிவாஜி மணி மண்டப விழா பேச்சு: கமல்ஹாசனுக்கு இரவில் திடீரென போன் போட்ட ரஜினிகாந்த்!
சிவாஜி மணி மண்டப திறப்பு விழா நடைபெற்ற இரவு திடீரென கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் போன் போட்டு சில விஷயங்களை விவரித்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்ற இரவு கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் திடீரென போன்போட்டு சில விஷயங்களை விவரித்ததாக கூறப்படுகிறது.
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் யார் முதலில் அரசியலில் குதிப்பது என்கிற போட்டியில் இருப்பதை அந்த பேச்சு உணர்த்தியது.

ரஜினி பேச்சால் சர்ச்சை
இது தொடர்பாக பல விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ரஜினிகாந்தின் பேச்சு கமல்ஹாசன் தரப்பை ரொம்பவே அதிருப்தி அடைய வைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரஜினிகாந்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

கமலிடம் விவரித்த ரஜினி
இதையடுத்து அந்த இரவிலேயே கமல்ஹாசனுக்கு போனடித்தாராம் ரஜினிகாந்த். அப்போது, யதார்த்தமாக மனதுக்கு பட்டதைத்தான் பேசினேன். என் பேச்சு உங்களை காயப்படுத்திவிட்டதாக சொல்றாங்களே என ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார்.

நீங்க அப்படி பேசலையே..
உடனே இடைமறித்த கமல்ஹாசன், உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க.. எனக்கு எந்த வருத்தமும் இல்லையே.. நான் வருத்தப்படுகிற மாதிரி நீங்களும் பேசலையே என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

ட்விட்டரில் குமுறல்
என்னதான் ரஜினிகாந்திடம் இப்படி கூறினாலும் கமல்ஹாசனுக்கு அதிருப்தி இருக்கத்தான் செய்கிறதாம். அதனால்தான் அன்று இரவே ட்வீட்டரில், தொடக்கத்தில் நிராகரிபார்கள், பின்னர் சிரிப்பார்கள்... இறுதியில் ஏற்பார்கள் என பதிவிட்டு ஆறுதலடைந்தாராம் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications