சசி போஸ்டரை கிழித்தவரை அடித்து துவைத்த ராஜேந்திர பாலாஜிக்கு பால்வளம்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன் ஒட்டப்பட்டிருந்த சசிகலா போஸ்டரை கிழித்த அதிமுக தொண்டரை அடித்து துவைத்த ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் பால்வளம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் சசிகலா போஸ்டரை கிழித்த அதிமுக தொண்டர் ஒருவரை அடித்து துவைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் முதல்வராக இருந்த போது, அதிமுகவின் தொண்டர்கள் பலர் சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அப்போது, சசிகலாவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன.

அப்போது, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டின் முன் சசிகலாவை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்றை அதிமுக தொண்டர் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த எளிய அதிமுக தொண்டரை பிடித்து அடித்து உதைத்தார். பின்னர் போலீசில் ஒப்படைத்தார்.
'சின்னம்மாவிற்கு உனக்கும் என்ன சம்பந்தம்' என்று கேட்டு உதைத்த ராஜேந்திர பாலாஜிக்குதான் தற்போது மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே வகித்து வந்த அதே பால்வளத் துறையை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையிலும் ஒதுக்கியுள்ளது.
பெரும் இழுபறிக்கு இடையில் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிமுக சட்டசபைக் குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்தார். இதனையடுத்து, எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி ஓபிஎஸ், மாஃபா பாண்டியராஜன் ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications