அதிமுகவிடம் இருந்து பி படிவம் அவசரமாக பெறவில்லை.. நிதானமாகத்தான் பெற்றோம்.. ராஜேஷ் லக்கானி
அவசர கதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் இருந்து பி படிவத்தை பெறவில்லை என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
சென்னை: அவசர கதியில் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் இருந்து பி படிவத்தை பெறவில்லை என்றும் 25ம் தேதி அனுப்பப்பட்டு 27ம் தேதி பெறப்பட்டது என்று ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
வரும் 19ம் தேதி தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வேட்பாளர்களுக்கு, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து படிவம் பி வழங்கப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கையின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பி. படிவத்தில் ஜெயலலிதாவின் கை ரேகை பதியப்பட்டது பெரும் சர்ச்சையை தமிழக அரசியல் சூழலில் எழுந்தது. அதற்கு, ஜெயலலிதா கையெழுத்து இடுவதற்கு பதிலாக கைநாட்டு வைக்க அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. அதெப்படி மின்னல் வேகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டும் அனுமதி தரமுடியும் என்றும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், 3 தொகுதி தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, அவசர கதியில் அதிமுக பொதுச்செயலாளரிடமிருந்து பி படிவம் பெறப்படவில்லை என்றும், பி படிவம் கடந்த 25ம் தேதி அனுப்பப்பட்டு, 27ம் தேதி பெறப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
-
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications