பக்கிரிசாமியை சும்மா விடக் கூடாது! அரபு நாடு போல் தண்டனை தருக! கொதிக்கும் ராஜேஸ்வரி பிரியா!
சென்னை: சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த பக்கிரிசாமிக்கு அரபு நாடுகளில் தருவது போன்ற கடுமையான தண்டனை தர வேண்டும் என அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவரும், பெண்ணுரிமை செயற்பாட்டாளருமான ராஜேஸ்வரி பிரியா வலியுறுத்தியுள்ளார்.
பக்கிரிசாமி செய்த கொடூரத்தை நினைத்தால் பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு பெற்றோரையும் கண்ணீர்விட வைப்பதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராஜேஸ்வரி பிரியா விடுத்துள்ள பதிவு வருமாறு;
''கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தனியார் பள்ளியில் பயின்ற 5 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யபட்ட சம்பவம் மனதை பதைக்க வைக்கிறது.
இந்த கொடூர செயலை செய்த மிருகம் திமுக நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமிக்கு கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
பிஞ்சு குழந்தை அந்த மிருகத்திடம் சிக்கி எவ்வளவு கொடுமைபட்டிருக்கும் என்று நினைத்தால் குற்றவாளிக்கு அரபு நாட்டில் வழங்கபடும் தண்டனை போல நடு ரோட்டில் வைத்து வெட்ட வேண்டும் என்றே தோன்றுகிறது.

அதிர்ச்சி மிகுந்த தகவல் குழந்தையின் பிறப்புறுப்பில் 7 தையல் போடபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டிருப்பது , பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு பெற்றோரையும் கண்ணீர்விட வைக்கிறது.
தண்டனைகள் கடுமையாக்கபட வேண்டும்.குற்றவாளி யார் என தெரிந்தும் காலதாமதம் ஏன்? விசாரனை என்ற பெயரில் பல ஆண்டுகள் வழக்கை நிலுவையில் போடாமல் உடனடியாக தண்டிக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
