ரஜினி நன்கு படித்தவர்... ஆங்கிலத்தில் உரையாட முடியும்- சு.சுவாமிக்கு பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி
ரஜினிகாந்த் நன்கு படித்தவர், அவரால் ஆங்கிலத்தில் உரையாட முடியும் என்று சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
வள்ளியூர்: பொதுவாழ்க்கைக்கு ஏற்றவர் ரஜினிகாந்த்; நன்கு படித்தவர், ஆங்கிலத்தில் உரையாடவும் முடியும் என்று சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று கடந்த 21 ஆண்டுகளாக அவது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அவரோ அரசியலுக்கு வராமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அரசியல் குறித்து ரஜினி பேசினார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறினார்.

ஆதரவும், எதிர்ப்பும்...
அரசியலுக்கு வருவதாக ரஜினி நேரிடையாக சொல்லாவிட்டால் இதை அவரது மறைமுக பதிலாக எடுத்துக் கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ரஜினி முறையாக அறிவிப்பதற்கு முன்னரே பல்வேறு அரசியல் கட்சிகள் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.

சு.சுவாமி கருத்து
ரஜினி குறித்து சுப்பிரமணியன் சாமி தெரிவிக்கையில், கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ள ரஜினிகாந்த் அரசியலுக்கு தகுதியற்றவர். படிக்காதவர், கொஞ்சமும் கல்வியறிவு இல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரஜினி படித்தவர்
இதற்கு பதிலளிக்கும் வகையில் வள்ளியூரில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ரஜினி நன்கு படித்தவர். அவரால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். அவர் பொதுவாழ்க்கைக்கு ஏற்றவர்.

அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும்
நாட்டுக்கு நன்மை பயக்கும் கேள்விகளை ஸ்டாலின் கேட்க மாட்டார். எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் கல்வித் தரம் உயரும். திமுகவினர் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் டெல்லியில் என்னுடன் திமுக எம்பிக்களும் இந்தி படித்தனர் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு











Click it and Unblock the Notifications