தூத்துக்குடி வன்முறை, உயிரிழப்புகளுக்கு அரசே பொறுப்பு.. அட்மின் மூலமாக அறிக்கை விட்ட ரஜினி!
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் அறிக்கை ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
அதில் தலைவர் ரஜினிகாந்த் என்று போடப்பட்டிருப்பதால் இந்த அறிக்கையை ரஜினி மக்கள் மன்றத்தின் அட்மின் வெளியிட்டுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயது மாணவி உட்பட 9 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொத்தாக 9 உயிர்களை பறித்துள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் வாயே திறக்காமல் இருந்தார். தற்போது மக்கள் மன்றம் மூலமாக அவரது பெயரில் ஒரு டிவிட் வெளியாகியுள்ளது.

மதிக்காத அரசு
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் என்ற டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசே பொறுப்பு
நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு - தலைவர் ரஜினிகாந்த் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அட்மின் மூலமாக ஒரு டிவிட் போடச் சொல்லியுள்ளார் ரஜினி
|
ஆவேசமாக கூறிய ரஜினி
ரஜினி தனது கண்டனத்தில் ஒரு இடத்தில் கூட போலீசாரின் நடவடிக்கையை கண்டிக்கவில்லை. சென்னை ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டது குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தார் ரஜினி.

அரசு மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் 9 அப்பாவி உயிர்களை போலீசார் பறித்துள்ள நிலையில் அதுகுறித்து ஒரு இடத்தில் கூட ரஜினி கருத்து தெரிவிக்கவில்லை. மாறாக அரசுதான் இதற்கு முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

ரஜினி டிவிட்டரில் ஏன் கருத்து இல்லை
முன்பு சென்னை போராட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கம் மூலமாக தனது ஆவேசத்தைக் காட்டியிருந்தார். ஆனால் தூத்துக்குடியில் மிகப் பெரிய படுகொலை நடந்துள்ள நிலையில் அட்மின் மூலமாக அவர் போட்டுள்ள டிவிட் மக்கள் தொடர்பான விவகாரங்களில் அவர் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
|
ரஜினி டிவீட் - மக்கள் கொந்தளிப்பு
ரஜினி போட்டுள்ள டிவிட்டுக்கு மக்களிடையே கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. அதிலிருந்து சான்றுக்கு ஒன்று இந்த கமெண்ட்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications