சோளிங்கரில் ரஜினி ரசிகர்கள் நடத்தும் மனிதநேய மாநாடு... தாணு, லிங்குசாமி பங்கேற்பு!
'தலைவா.. நீங்க அரசியலுக்கு வரீங்களோ இல்லையோ... ஆனால் நிச்சயம் ரசிகர்களுக்காக ஒரு மாநாடு நடத்துங்க'
-இது சமீபத்தில் வெளியான ரஜினி ரசிகர்களின் கோரிக்கை. சமூக வலைத் தளங்களிலும் செய்தி இணையதளங்களிலும் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வேளையில், ரஜினி ரசிகர்கள் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் இந்த மாநாடு அரசியல் பேச அல்ல, மனித நேயம் பேச. ஏழைகளுக்கு ஏராளமான உதவிகள் செய்வதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

மலரட்டும் மனித நேயம்
இந்த மாநாட்டுக்கு தலைப்பே 'மலரட்டும் மனிதநேயம்' என்று சூட்டப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் நகரில் நடக்கும் இந்த மாநாட்டுக்காக, 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் மக்கள் அமர வசதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் சோளிங்கர் என் ரவி ஏற்பாட்டில் நாளை மறுநாள் ஜனவரி 24 ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்த மாநாட்டுக்கு ஏராளமான திரைத்துறை விவிஐபிகள் பங்கேற்கின்றனர்.

30 ஆயிரம் பேர்
இதுகுறித்து சோளிங்கர் ரவி நம்மிடம் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மன்ற பொறுப்பாளர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். சுமார் 30 ஆயிரம் பேர் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கிறோம்," என்றார்.

திரையுலகினர் பங்கேற்பு
ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் - நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் என் லிங்குசாமி, நடிகர்கள் பாபி சிம்ஹா, ஜீவா, ஜோ மல்லூரி, கருணாஸ், கருணாகரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.

உதவி
இந்த நிகழ்ச்சியில் 1500 நலிந்த ரசிகர்களுக்கு ரூ 15 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்படுவதாக சோளிங்கர் ரவி அறிவித்துள்ளார்.
ரஜினி ரசிகர்கள் சார்பில் நடக்கும் முதல் பெரிய மாநாடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications