ரஜினியிடம் பணம் கேட்கும் இவர்கள் உண்மையிலேயே விவசாயிகளா?
நேற்று ஒன் இந்தியா இணையத் தளத்தில் 'ஒரு மாதத்திற்குள் ரூ.1 கோடி தரவேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் ரஜினிக்கு விவசாயிகள் கெடு' என்ற ஒரு செய்தியைப் பார்த்ததும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
நான் 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், இது நிச்சயமாக விவசாயிகளின் மிரட்டலாக இருக்காது என்று உள்ளம் உறுதியாகச் சொல்லியது.

என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்று செய்தியைப் படித்துப் பார்த்தால் யாரோ அப்பாக்கண்ணுவாம். தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கமாம். சங்கத்தின் பெயரைப் பார்த்தாலே இவர் ஒரு டுபாக்கூர் பேர்வழி என்று தெளிவாக புரிந்தது.
விவசாயிகள் யாரும் நதிகள் இணைப்பிற்காக இன்னும் சங்கம் தொடங்கவும் இல்லை. அதற்கு தேசியத்தையும் தென் மாநிலத்தையும் இணைத்து பெயர் வைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
கபாலிக்கு திரைத்துறையிலிருந்து சிக்கல் இல்லை என்பதால், நதி நீர் இணைப்பைக் காட்டி ரஜினியிடம் முட்டிப் பார்த்து பெயர் சம்பாதிக்கலாம் என்று இவர்கள் எண்ணியிருக்கக்கூடும்.
ரஜினி 1 கோடி ரூபாய் நிதியை அளிக்க வேண்டுமாம்!
முந்தய ஐந்தாண்டு அதிமுக ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் தமிழகத்தில் நதி நீர் திட்டம் என்று அறிவிப்பு வந்ததாக இதே ஒன் இந்தியாவில் எந்த செய்தியும் வந்ததில்லை. மோடி அரசு பதவியேற்று அர்த்தம் புரியாத வடமொழி பெயர்களில் பலப்பல திட்டங்கள் வந்தாலும் ‘பாணி அல்லது ஜல், ஜலம் ( அதான் தண்ணீர்) என்ற பெயரிலோ எந்த திட்டங்களும் அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் நதி நீர் இணைப்பு கூடவே கூடாது என்று ராகுல் காந்தி சொன்னது பெரிய அளவில் செய்தியாக வந்தது. அதே காலக் கட்டத்தில் தமிழகத்தில் திமுக அரசு, கருமேனி - நம்பியாறு இணைப்புத் திட்டம் என்று தொடங்கி, பணிகளும் நடைபெற்று வந்தது. அதன் பிறகு வந்த அதிமுக அரசு அதை நிறைவேற்றவோ அல்லது மாற்றி அமைக்கவோ இல்லை.
வாஜ்பாயை நம்பிய ரஜினி
17 ஆண்டுகளுக்கு முன்னால் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் காலத்தில் தங்க நாற்கரத் திட்டம் தொடங்கப்பட்டது. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடைபெற்றது. நதி நீர் இணைப்பு குறித்து பெரிய அளவில் பேசப்பட்டது.
அந்த காலக் கட்டத்தில் தான், இதையெல்லாம் பார்த்து நம்பிய ரஜினி, நதி தீர் இணைப்பு திட்டத்திற்கு தன்னுடைய ஆதரவும் உண்டு என்று சொல்லி 1 கோடி ரூபாய் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து தருவதாகச் சொன்னார்.
திட்ட வரைபடம் தயாரிக்கவே ஒரு கோடி ரூபாய், பத்தாது என்று ரஜினிக்கும் தெரியும். கொஞ்சமாவது சிந்திக்கும் திறன் கொண்ட அனைவருக்கும் தெரியும். அதனால் தான். உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடமிருந்து நன்கொடையாக பணம் திரட்டுவதற்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் ரஜினி கூறினார்.
ஆனால் வாஜ்பாய் அரசாங்கம் நதி நீர் இணைப்புத் திட்டத்தை பேச்சு அளவிலேயே நிறுத்திக் கொண்டு விட்டது. ரஜினியும் நிதி தர வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது.
யாருகிட்ட விவசாயின்னு கதை அளக்கிறார்?
ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் பணம் தரவேண்டும் என்று அப்பாக்கண்ணு என்று ஒருவர் சொல்கிறாரே. அவருக்கு விவசாயி என்றால் யாருன்னே தெரியாது போலும்.
வெள்ளையர் ஆட்சியிலேயே, அணைகட்ட நிதி கொடுத்தவர்கள் தமிழக விவசாயிகள். ஸ்ரீவைகுண்டம் தடுப்பணை கட்டிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலே அது தெரியும்.
காமராசர் காலத்தில் மணிமுத்தாறு உட்பட பல அணைகளுக்கும் விவசாயிகள் செலுத்திய வரி வசூல் மூலம் அந்த முன்னோர் பரம்பரையில் வந்தவர்கள்தான் தமிழகத்தில் இன்னும் விவசாயிகளாக இருக்கின்றனர். அனைவருக்கும் உணவு கொடுத்தே பழக்கப்பட்ட விவசாயிகள் எந்த சூழலிலும், அடுத்தவர்களிடம் கையேந்துவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.
அதனால்தான், வாங்கிய கடனை செலுத்த இயலவில்லை என்று என தங்கள் உயிரையே தியாகம் செய்கிறார்களே தவிர, பிச்சை கேட்டு கையேந்தி நிற்பதில்லை.
விவசாயிகள் குடும்பத்தில் பிறந்த எத்தனையோ பேர் இப்போது ஐரோப்பா, அமெரிக்கா என வெளி நாடுகளில் வசிக்கிறார்கள். ஊருக்கு பேசும் போதெல்லாம் , வயலில் தண்ணீர் இருக்காப்பா, தென்னை, வாழை நன்றாக இருக்கிறதா என்று தான் முதலில் கேட்பார்கள். விவசாய செலவுக்காக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பி வைக்கும் விவசாயிகளின் மகன்கள், மகள்கள் ஏராளம் உள்ளனர்.
விளம்பரப் பிரியர்களே வரம்பு மீறாதீர்கள்
அப்படிப்பட்ட விவசாயிகள் ரஜினியிடம் 1 கோடி கேட்டு நிற்கிறார்கள் என்றால், அந்த குடும்பங்களில் இனி பிறக்கப்போகும் குழந்தைகள் கூட நம்பப் போவதில்லை.
ரஜினி படத்தில் ‘ சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு. புனிதமான அரசியலை பயன் படுத்தாதீர்கள்' என்று ஒரு வசனம் வரும்.
அதைத் தான் சற்று மாற்றிக் கூறிக்கொள்கிறோம். உங்களுக்கு ரஜினிக்கு எதிராக பேசுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதற்காக அவரும் உங்கள் மீது எந்த வழக்கும் தொடரப்போவதில்லை. ஆனால் விவசாயிகள் என்று போலி வேஷம் போட்டு புண்படுத்தாதீர்கள்.
ரஜினி ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள்
விவசாயிகள் ஆண்டு தோறும் ஊர்த் திருவிழாவை விமரிசையாக கொண்டாடுவது இன்றும் வழக்கம். எல்லாத் துன்பங்களையும் மறந்து உறவினர்களோடு மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான் அந்த திருவிழாக்கள்.
அதைப்போல் ரஜினி ரசிகர்களாகிய உங்களுக்கு திருவிழா தருவதற்குத் தான் சூப்பர் ஸ்டார் தனது உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் நடித்து கபாலி போன்ற படங்களை தருகிறார். அதைக் கொண்டாடுங்கள். அற்ப விளம்பர செய்திகளுக்கு முக்கியத்துவம் தராதீர்கள்.
ஊருக்கெல்லாம் உணவு வழங்கும் விவசாயிகளுக்கு இப்படிப் பட்ட அற்பத்தனமான வேலைகள் செய்ய நேரம் இல்லை என்பதே உண்மை. உணர்ச்சிப் பெருக்கில் விவசாயிகளை தவறாக எண்ணி, தகாத வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். உங்கள் கபாலி திருவிழா சிறக்கட்டும்.. விவசாயிகள் நலனும் வளமும் செழிக்கட்டும்..
- விவசாயி மகன், அமெரிக்காவிலிருந்து.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications