சூழ்ந்திருக்கும் போலீஸ்.. பாதுகாப்பு கெடுபிடி.. அசராமல் ரசிகர்களுக்காக ரஜினி செய்ததை பாருங்கள்
சென்னை: கடும் பாதுகாப்பு கெடுபிடிகள், அவசரமாக நகர்ந்து செல்ல வேண்டிய சூழல் எது எப்படி இருந்தாலும், ஏர்போர்ட் ஊழியர்களின் அன்பையும் ஏற்று அவர்களுக்கு உரிய மரியாதையை காண்பித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கபாலி படப்பிடிப்பை முடித்த நிலையில் ஷங்கரின் 2 ஓ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார் ரஜினி. இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு என்று தகவல்கள் வந்தன.
இதையடுத்து 2ஓ படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். அங்கு ரஜினியுடன், அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் உடன் இருந்து தந்தையைக் கவனித்துக் கொண்டார்.

குவிந்த ரசிகர்கள்
இந்நிலையில், நேற்று இரவு சென்னை திரும்பினார் ரஜினி. தகவலை அறிந்து கொண்ட, ரசிகர்கள் விமான நிலையத்தில் குவிந்துவிட்டனர்.

பாதுகாப்பு
ரஜினி விமான நிலையத்தில் இருந்து வெளியேறும்வரை அவருக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்தனர். ரஜினியின் அருகே சென்று கை கொடுப்பது, போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
வாழ்த்து கோஷங்கள்
பயணிகள் வெளியேறும் வழி வழியா ரஜினி விமான நிலையத்தின் வெளியே வந்தார். வெளியேதான் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ரஜினி வருவதை பார்த்து, தலைவா, தலைவா என வாழ்த்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

விமான நிலைய ஊழியர்களுக்கு டாடா
அதேநேரம், விமான நிலையத்தின் உள்ளே ரஜினி நடந்து வந்தபோது காட்சியாக்கப்பட்ட வீடியோவும் நமக்கு கிடைத்துள்ளது. அதில் விமான நிலைய பணியாளர்களை பார்த்து ரஜினி கையசைத்து செல்லும் காட்சி இடம் பிடித்துள்ளது.

மரியாதை
சுற்றிலும் போலீசார் நின்று கொண்டு சீக்கிரம் செல்லுங்கள் என அவசரப்படுத்திய சூழ்நிலையிலும், ரசிகர்களுக்கு மட்டுமின்றி விமான நிலைய ஊழியர்களுக்கும் ரஜினி மரியாதை கொடுத்து கையசைத்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications