ரஜினியின் ஆன்மீக அரசியல், மத அரசியல் கிடையாது: தமிழருவி மணியன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆன்மிக அரசியல் மேற்கொள்ள போவதாக ரஜினி சொன்னதை தவறாக சித்தரிக்க வேண்டாம் என்று சொல்லி அதற்காக விளக்கத்தையும் தமிழருவி மணியன் தெரிவித்து உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தான் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக நேற்று ரசிகர்கள் சந்திப்பில் அறிவித்து உள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பால் கால்நூற்றாண்டுகளாக அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்கிற கேள்விக்கு பதில் கிடைத்து உள்ளது.

இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் தற்போது மன்றங்களை பலப்படுத்தவேண்டும் அதன் பின்பு தான் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்து உள்ளதோடு, தான் ஆன்மீக அரசியல் மேற்கொள்ள போவதாகவும் ரஜினி தெரிவித்து உள்ளார்.

 தமிழக அரசியல் களம்

தமிழக அரசியல் களம்

இதனால் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் ? அவரது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை எதுவாக இருக்கும் என்று பல தரப்பட்ட விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஆன்மீக அரசியல் என்பது நியாமான, தர்மமான அரசியல் என்று ரஜினியே விளக்கம் அளித்து உள்ளார்.

 ரஜினி அரசியலுக்கு வருவார்

ரஜினி அரசியலுக்கு வருவார்

இதுகுறித்து ரஜினியின் நீண்டகால நண்பரும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவருமான தமிழருவி மணியன் கருத்து தெரிவித்து உள்ளார். ரஜினியை அரசியலுக்கு அழைத்து வந்ததில் இவருக்கும் பெரும் பங்கு உண்டு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த முறை ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்து இருந்தார்.

 ஆன்மீக அரசியல் என்ன ?

ஆன்மீக அரசியல் என்ன ?

இதுகுறித்து அவர் கூறியதாவது, ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பதற்கு பல விதமான அர்த்தங்கள் சொல்லி வருகிறார்கள். அதிலும் பாஜகவோடு இணையவே ஆன்மீக அரசியல் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால், மத அரசியல் என்பது வேறு. ஆன்மீக அரசியல் என்பது வேறு. காந்திய வழியில் ரஜினி பயணிக்க ஆசைப்படுகிறார்.

 இணைந்து பணியாற்றுவேன்

இணைந்து பணியாற்றுவேன்

காந்தி முன்னெடுத்த அரசியல் தான் ஆன்மீக அரசியல். உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவரையும் அன்பால் நேசிப்பது என்பது தான் ஆன்மீகம். இதை தான் காந்தி முன்னெடுத்தார். காந்திய அரசியல் சொல்வதும் இது தான். இதில் ஊழல், தவறு, குற்றம் என எதற்கும் இடம் கிடையாது. நானும் காந்தியவாதி என்பதால் ரஜினியுடன் நிச்சயம் இணைந்து பணியாற்றுவேன் என்று தெரிவித்து உள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Rajini willing to do Gandhian Politics says Tamilaruvi Maniyan. Tamilaruvi Maniyan is Rajini's friend for years and he also added that spiritual politics is nothing but Gandhian Principals.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற