ரஜினிகாந்தின் டார்ஜிலிங் பயணம் திடீர் ஒத்திவைப்பு
ரஜினிகாந்தின் டார்ஜிலிங் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் டார்ஜிலிங் பயணம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகள் கடும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. போராடிய பொதுமக்களை சமூகவிரோதிகள் என ரஜினிகாந்த் கூறியது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

ரஜினிகாந்த் வீடு முற்றுகைப் போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இதனிடையே செய்தியாளர்களை ஒருமையில் பேசியதற்கு மட்டும் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்தார்.
ஆனால் போராடிய மக்களை சமூக விரோதிகள் எனக் கூறியதற்கு ரஜினிகாந்த் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று ஓய்வுக்காக டார்ஜிலிங் செல்ல திட்டமிட்டிருந்தார்.
தற்போது இந்த பயணத்தை ரஜினிகாந்த் ஒத்திவைத்துள்ளாராம். மேலும் தமக்கு எதிராக திரும்பியுள்ள தமிழக நிலவரம் குறித்து முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம் ரஜினிகாந்த்.












Click it and Unblock the Notifications