ரஜினியை பார்க்கத் திரண்ட ரசிகர்கள்... போயஸ்கார்டனில் தள்ளுமுள்ளு!
சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை பார்க்க ரசிகர்கள் திரண்டதால் போலீசார் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Recommended Video

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரசிகர்கள் திரண்டனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்களை போலீசார் வெளியேற்றியதால் ரசிகர்கள் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திரைத்துறையில் தொடக்கம் முதலே கதாநாயகனாக வலம் வரும் நடிகர்களில் ஒருவரும், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமுமான நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

இன்று காலை 6 மணி முதலே ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரசிகர் மன்றக் கொடியை கையில் ஏந்தியவாறு போயஸ் கார்டன் நுழைவு சாலையில் இருந்து ரஜினி இல்லம் நோக்கி அணி அணியாக வரத் தொடங்கினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இல்லம் வரை ரசிகர்கள் திரண்டு நின்றதால் முன் எச்சரிக்கையாக ரசிகர்களை போலீசார் அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றினர்.

ரஜினி இல்லத்தை இணைக்கும் மற்றொரு சாலையான ராதாகிருஷ்ணன் சாலை அருகே ரசிகர்களை போலீசார் வெளியேற்றிவிட்டனர்.இதனால் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் ரசிகர்கள் யாரும் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருக்கின்றனர்.

கடந்த பிறந்தநாளின் போது ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் திடீரென ரசிகர்கள் மத்தியில் தோன்றி பேசினார். அது போன்றே இந்த முறையும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசுவார் என்ற எதிர்பார்ப்பால் ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications