பாடாய்படுத்தும் அரசியல் மேனியா...தூக்கம் தொலைத்த ரஜினி...மனநிம்மதிக்காக எங்கே செல்கிறார் தெரியுமா?
அரசியல் பிரவேசம் குறித்து மீடியாக்களும், ரசிகர்களும் துளைத்துப் போட்டத்தில் டென்ஷனாகியுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவ்வபோது கேளம்பாக்கத்தில் உள்ளது தனது பண்ணை வீட்டிற்கு சென்று இளைப்பாறி வருகிறாராம்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தை சுற்றும் அரசியல் பேச்சுகளால் தூக்கம் தொலைத்த ரஜினி இரவு நேரங்களில் மாவட்ட ரசிகர் மன்ற ரசிகர்களுடன் மாவட்ட நிலவரங்களை கேட்டறிந்த வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 2 வாரமாக தமிழக அரசியலில் சூட்டை கிளப்பும் ஒரு விஷயம் என்றால் அது ரஜினியின் அரசியல் வருகை குறித்த பிரத்யேக விஷயங்களாகத்தான் இருக்கும். ரஜினிகாந்த் சொன்ன 'போர்' என்ற வார்த்தையை அரசியல் கட்சியினரும், தமிழ் ஆர்வலர்களுக்கு தங்களுக்கு ஏற்ப பயன்படுத்தி ரஜினியை வாழ்த்தியும், விமர்சித்தும் வருகின்றன. இதே போன்று ரஜினி எழுப்பி விட்ட மற்றொரு சர்ச்சை தான் பச்சைத் தமிழன் என்பது, கன்னடர் எப்படி தமிழராக முடியும் அரசியலுக்கு வரவே அவர் இவ்வாறு பேசுகிறார் என்று கடும் விமர்சனங்கள் எழுகின்றன.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவரது நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்திருந்தார். ரஜினிக்கு அரசியல் ஆசை வந்துவிட்டது என்றும் 20 ஆண்டுகளில் இல்லாத தெளிவு தற்போது வந்துவிட்டதாகவும் விரைவில் கட்சி தொடங்குவது திண்ணம் என்றும் போட்டு உடைத்தார்.

தொலைபேசியில் சர்வே
ரஜினி அடுத்துவரவிருக்கும் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் களம் காண்பார் என்று சமிக்ஞைகள் காட்டப்படும் நிலையில், இரவு நேரங்களில் மாவட்ட வாரியாக ரசிகர்களுடன் ரஜினி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரே பேசி வருவதாகக் கூறப்படுகிறது. மாவட்டத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன, தான் அரசியலில் இறங்கினால் மக்களின் வரவேற்பு எப்படியெல்லாம் இருக்கும் என்று இரவு முழுவதும் பேசி வருகிறாராம்.

கொள்கை என்ன?
அதே சமயம் இதுவரை தான் நடிகனாக மட்டுமே வலம்வந்த நிலையில் தனக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து அரசியலுக்கு ஏற்ப கொள்கைளை வகுக்கும் திட்டத்திலும் இறங்கியுள்ளாராம் ரஜினிகாந்த். மக்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஊழல் என்ற ஒன்றாலேயே என்பதால் அதனை கையில் எடுத்து அதிரடி திட்டங்களுடன் அரசியல் களம் காணலாம் என்ற திட்டத்தின் வெளிப்பாடாகவே பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் அரசியலுக்கு வர நினைப்போரை அருகில் கூட வைத்துக் கொள்ளமாட்டேன் என்றதன் பின்னணியாம்.

நெருக்கும் பாஜக
தான் அரசியலுக்கு வருவதாக சொன்ன உடனேயே பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் என்றும், பாஜகவில் இணைய வேண்டும் என்றும் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று அழைப்பு விடுத்தார். ஆனால் தனிக்கட்சி தொடங்கி மக்கள் மத்தியில் அரசியலில் நுழையவே விரும்பும் ரஜினி பாஜகவின் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் இரவில் தூக்கம் தொலைத்து திரிவதாகவும் சொல்லப்படுகிறது.

இளைப்பாறும் ரஜினி
அரசியல் டென்ஷனில் உள்ள ரஜினி மன நிம்மதிக்காக அடிக்கடி கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது. முன்பெல்லாம் எப்போதாவது ரஜினி அங்கே சென்று தனிமையில் ஓய்வெடுப்பாராம், ஆனால் தற்போது விடாத விரட்டு அரசியல் கேள்விகளால் 2 நாட்களுக்கு ஒரு முறை கேளம்பாக்கம் சென்று தனிமையில் சிந்தனை செய்து வருகிறாராம்.
-
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
ராகுலிடம் போன டாக்குமெண்ட்! நள்ளிரவில் நடந்த மீட்டிங்! இன்று வெளியாகும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்!












Click it and Unblock the Notifications