சமூக விரோதிகளை உங்களுக்கு தெரியும்னா... பலியான 13 பேரும் எந்த இயக்கம்னு சொல்லுங்க சார்?
சமூகவிரோதிகளை தனக்கு தெரியும் என்று கூறும் ரஜினி காந்த் அப்படியே பலியான 13 பேரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் தெளிவுப்படுத்தலாமே.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்தவர்கள் சமூக விரோதிகள்தான் எனக்கு தெரியும் என்று கூறும் ரஜினிகாந்த் , போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் சொல்லிவிடலாமே.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களையும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி சென்றார் ரஜினிகாந்த்.
அப்போது ஒரு இளைஞர் யார் நீங்க என்று கேட்டு ரஜினியை அவமதித்துவிட்டார். போராடும் போது வரவில்லை, இப்போது ஏன் வந்தீர்கள் என்றும் கேட்டுள்ளார்.

ஆவேசம் அடைந்த ரஜினி
இதனால் ரஜினி சிரித்தவாறே அந்த இளைஞருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நகர்ந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ரஜினி பேசுகையில் போலீஸாரை தாக்கியதும், ஆட்சியரகத்தை கொளுத்தியதும் சமூகவிரோதிகள்தான் என்றார்.

ரஜினி பதில்
அதற்கு செய்தியாளர்கள் சமூகவிரோதிகள்தான் என்று எப்படி தெரியும் என்ற கேள்விக்கு எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார் ரஜினி. திரும்பத் திரும்ப சமூகவிரோதிகள் என்று கூறும் ரஜினி எனக்குத் தெரியும் என்றும் கூறுகிறார். அதேபோல பலியான 13 பேரும் யார் என்பதையும் ரஜினியே விளக்க வேண்டும். அவர்கள் எந்த தீவரமாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதையும் ரஜினியே பிரஸ்மீட் வைத்து தெளிவுபடுத்தலாம்.

ரஜினியிடம் துப்பு
மேலும் காவல்துறை ரஜினியிடம் அந்த சமூக விரோதிகள் யார் என்ற விவரத்தை அறிய முயற்சிக்கலாம். காரணம், ரஜினியிடம் மிகப் பெரிய துப்பு இருப்பது போல தெரிகிறது. அதை போலீஸார் விசாரித்து உண்மையை அறிய முயற்சிக்கலாம்.

காவல் துறை
அதேபோல ரஜினி தானாக முன்வந்து தூத்துக்குடி எஸ்பி அலுவலகம் சென்று தனக்குத் தெரிந்த பட்டியலை கொடுத்து போலீஸாரையும், ஆட்சியரகத்தையும் தாக்கியவர்கள் மீது காவல்துறை துரித நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும். அதை விட்டு விட்டு வாய் வலிக்க கோபம் காட்டி பிரயோஜனமும் இல்லை.
-
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications