ஒருதுளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்கம் கொடுத்த ரசிகன் ஆதார், பான்கார்டுகளை காட்ட வேண்டுமா ரஜினி சாரே?
ரஜினி ரசிகர்களை சந்தித்து வருகிறார். 5 நாட்கள் நடக்கும் இந்த ரசிகர்கள் சந்திப்பில் ரஜினியிடன் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் ஆதார், பான்கார்டுகளை கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளது விமர்னத்தை உருவாக்கியு
சென்னை: ரஜினி தன் ரசிகர்களை சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். மாவட்டவாரியாக ரஜினி 5 நாட்கள் ரசிகர்களை சந்திக்கிறார். ரஜினியை சந்திக்க வரும் ரசிகர்கள்,பான்கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். அவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதியளிக்கபடுகிறது.
ரஜினி, தன் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வை கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு ரசிகர்களை சந்திக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அது பல காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டது.
இன்று ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த், அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 200 ரசிகர்கள் வீதம், 5 நாட்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்.

விஜயகாந்த் மாடலா?
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆனால், அப்படி புகைப்படம் எடுக்கும்போது பிடித்த வைத்த கல் சிலை போல எந்த உணர்வுகளையும் காட்டாமல் அப்படியே உட்கார்ந்திருந்தார். அதனால் அவரது தொண்டர்கள் மனம் நொந்து போனார்கள்.
இப்போது ரஜினி ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஐடியா, விஜயகாந்த் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதிலிருந்து உருவப்பட்ட ஐடியாவா என நெட்டீசன்கள் வழக்கம் போல் கருத்து சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

ஆதார், பான்கார்டெல்லாம் எதுக்கு?
ரஜினி 5 நாட்கள் ரசிகர்களை சந்திக்கும்போது, அவர்கள் கட்டாயம் பான்கார்டு அல்லது ஆதார் கார்டு அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டுமென்று கூறியுள்ளனர். மத்திய அரசுதான் குழந்தைகள் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடுவதற்கு கூட ஆதார் கார்டு அவசியம் என வலியுறுக்கிறது என்றால் ரஜினி மீது உயிரையே வைத்திருக்கும் தொண்டர்கள் தன்னை சந்தித்து போட்டோ எடுக்கக் கூட ஆதார், பான்கார்டு அவசியம் என சொல்வது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது

ஒரு துளி வேர்வை...ஒரு பவுன் தங்கம்
தன்னுடைய 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தது தமிழ் அல்லவா' என திரையில் பாடிய ரஜினிதான் தன் ரசிகர்கள் தன்னை சந்திக்க வரும்போது, ரசிகர்மன்றம் கொடுத்த அடையாளாட்டையுடன், ஆதார், பான்கார்டும் அவசியம் என கூறியுள்ளார். இது மத்திய அரசு உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகும், அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் அவசியம் என கூறிவருவதைப் போல உள்ளது.

ஜப்பான் ரசிகர்களுக்கும் ஆதார் உண்டா?
ரஜினிக்கு ஜப்பான் நாட்டில் பெரிய ரசிகக் கூட்டம் உள்ளது. ஆனால் அந்த ரசிகர்கள் எல்லாம் தன்னை வந்து சந்தித்துப் புகைப்படம் எடுக்கும்போது எந்த அடையாள அட்டையையும் அவர் கேட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications