வழிக்கு வந்த பாக்.! “போர் எங்கே கைவிடப்பட்டது?” செய்தியாளர்கள் கேள்விக்கு ரஜினி ரியாக்ஷன்!
சென்னை: இந்தியா-பாகிஸ்தான் இடையே பேர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
விமான நிலையத்தில் ரஜினி நுழைந்தவுடன் அன்னையர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். பின்னர் போர் கைவிடப்பட்டிருக்கிறதே, இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. உடனே, "எங்கே கைவிடப்பட்டது?" என்று ரஜினி பதில் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ரஜினி, "பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து அங்குள்ள பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்திற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த போரை மிக திறைமையாக, வலிமையாக, வீரியமாக கையாண்ட நம்ம பாரத பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள், வீரர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஏப்.22ம் தேதி பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் சிறப்பு ராணுவ நடவடிக்கையை தொடங்கியது இந்தியா. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது குண்டுகள் வீசி அழிக்கப்பட்டன. நம் வீரர்கள் எல்லையை தாண்டாமலேயெ இந்த சாதனையை செய்தனர். ராணுவத்திற்கு இந்திய விமானப்படை மிகப்பெரிய பக்க பலமாக இருந்தது.
இந்த தாக்குதலை தங்களுக்கு எதிராக நினைத்துக்கொண்டு பாகிஸ்தான் வரிந்துக்கொண்டு வந்தது. எல்லையில் அத்துமீறி தாக்குதலையும் நடத்தியது. ஆனால் பாகிஸ்தானின் ஏவுகணை தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன. இந்நிலையில் இந்தியா பதிலடியை கொடுத்தது. பாகிஸ்தானின் மிக முக்கிய விமான தளங்கள் மீது நாம் நடத்திய தாக்குதலால் அந்நாடு மிரண்டு போனது. பதில் தாக்குதலை எதிர்பார்க்காத பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு சர்வதேச நாடுகளிடம் கெஞ்சியிருக்கிறது.
இதனையடுத்து சர்வதேச நாடுகள் தலையீடு செய்தன. இந்தியாவும் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்தது. தற்போது எல்லையில் அமைதி நிலவி வருகிறது. இந்திய ராணுவம் மேற்கொண்ட சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications