சோபியா விவகாரம் குறித்து ரஜினியிடம் கருத்து கேட்ட நிருபர்கள்.. கிடைத்த ஷாக் பதில்
Recommended Video

சென்னை: மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.
மாணவி சோபியா என்பவர், தூத்துக்குடி விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்திறங்கியபோது, அருகே இருந்த பாஜக மாநில தலைவர் தமிழிசையை பார்த்து, பாசிச பாஜக ஒழிக என கோஷமிட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து விமான நிலையத்தில் வைத்து, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சோபியாவிடம் வாய் தகராறு செய்தார் தமிழிசை.

பரபரப்பு சம்பவம்
மேலும், சோபியா மீது காவல் நிலையத்திலும் தமிழிசை புகார் அளித்தார். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், பாமக தலைவர்கள் மட்டுமின்றி, மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் தமிழிசைக்கு கண்டனத்தை பதிவு செய்தனர்.

ரஜினி மட்டும் கருத்து இல்லை
ஆனால், இதுவரை ரஜினிகாந்த் மட்டும் கருத்து கூறாமல் இருந்து வந்தார். கூடிய சீக்கிரம் அரசியல் கட்சி துவங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்ததால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனாலும், ரஜினிகாந்த் ட்விட்டரில் கூட கருத்து கூறவில்லை. இதனிடையே அடுத்தகட்ட படப்பிடிப்பில் பங்கேற்க உத்தரபிரதேசம் செல்வதற்காக, ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையம் வந்தார்.

ஏர்போர்ட்டில் பேட்டி
ரஜினிகாந்த்தை பார்த்த நிருபர்கள்கள், அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். நிற்காமல் நடந்தபடியேதான் அவற்றுக்கு பதில் அளித்தார், ரஜினிகாந்த். ரஜினிகாந்த்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்களை பாருங்கள்.
கேள்வி: அரசியல் கட்சியை எப்போது துவங்குவதாக உள்ளீர்கள்?
பதில்: அதற்கு நிறையவாட்டி பதில் சொல்லியாச்சி கண்ணா.

ரெய்டுக்கும் பதில் இல்லை
கேள்வி: அமைச்சர்கள், அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடந்து வருகிறது, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இல்லைங்க, அதுபற்றி எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகம் முழுக்க இருநாட்களாக ரெய்டு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

கருத்து இல்லை
கேள்வி: சோபியா மீது வழக்கு தொடர்ந்துள்ளார்களே அதுபற்றி?
பதில்: நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தாங்க்ஸ். இவ்வாறு ரஜினிகாந்த் பதிலளித்தார். சோபியா விவகாரத்தில் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications