காலா.. பெயரைச் சொன்னதுமே வண்டிகளில் ஸ்டிக்கர் ஒட்டி அசத்திய அடேங்கப்பா ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்தின் காலா பட அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே காலா மேனியாவிற்கு தயாராகி விட்டனர் ரசிகர்கள்
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காலா பட போஸ்டர்கள் சாலைகளில் வலம் வரும் வாகனங்களில் ரகளைப்படத் தொடங்கிவிட்டன.
கபாலி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் நடித்து வந்தார் நடிகர் ரஜினிகாந்த், இந்நிலையில் ரஜினியின் அடுத்த திரைப்படத்தையும் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்க உள்ளதாக டிவிட்டரில் நேற்று நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தின் 164வது படமான இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று அப்படத்திற்கு காலா என பெயர் தலைப்பு வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.

மாலையில் வெளியான ஃபர்ஸ்ட் லுக்
மேலும் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தின் Firstlook 6 மணியளவில் வெளியிடப்பட்டது. கபாலி படத்தில் கோர்ட் போட்டு வந்த தாதா ரஜினி இந்தத் திரைப்படத்தில் லுங்கி அணிந்து வந்து வயசான தாதாவாக மிரட்டுகிறார்.
|
வாகனங்களில் காலா போஸ்டர்கள்
காலா மேனியா சமூக வலைதளங்களில் படு ஜோராக பரவிட்டது. பலரின் ப்ரொபைல் பிச்சராக காலா ஃபர்ஸ்ட் லுக் மாறிவிட்டது என்றே சொல்லாம். ஆனால் இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பஸ், கார், ஆட்டோ, பைக் என இரவோடு இரவாக காலா போஸ்டர்களை வாகனங்களில் ஒட்டிவிட்டனர் ரசிகர்கள்.

முன்கூட்டியே கசிந்ததா
சமூகவலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. டெக்னாலஜி வளர்ச்சியால் ஒரே இரவில் இதை செய்து விடலாம் என்று வாதாடப்பட்டாலும், படத்தின் பெயர் மூன்கூட்டியே ரசிகர்கள் மத்தியில் கசிந்திருக்குமோ என்ற சந்தேகத்தையும் இவை எழுப்புகின்றன.

தீயாய் வேலை செய்யும் ரசிகர்கள்
ஆனால் மற்றொருபுறம் புயல் வேகத்தில் செயல்படும் ரசிகர்களின் ஆர்வத்திற்கு மற்றொரு காரணமும் உள்ளதாம். ரஜினி அரசியலுக்கு வந்தால் தாங்கள் செயல்படும் விதம் குறித்து விளக்குவதற்காக என்று கெத்து காட்டுகின்றனர் ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications