தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் இருக்குங்க... சொல்வது ரஜினி!
தேர்தலுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கிறது என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னை: தேர்தலுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
காமராஜரின் 116-ஆவது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினிகாந்த் போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் காமராஜர் போன்ற ஒரு தலைவர் மீண்டும் உருவாக வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கல்வி சிறப்பாகவே இருக்கிறது. அதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்திய கொள்கையில் வாழ்ந்து கொண்டிருப்பர் தமிழருவி மணியன் என்பது அனைவருக்கும் தெரியும்.

மனமார்ந்த நன்றி
காமராஜரின் கொள்கைகளில் உறுதியாக இருக்கும் தமிழருவி மணியன் என்னுடன் இணைந்தால் எனக்கு சந்தோஷம்தான். அவருக்கு எனது மனமார்ந்த் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உழைக்க வேண்டும்
நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பதற்கான சாத்தியம் இல்லை என்பது எதுவும் கிடையாது. நல்ல எண்ணம் இருக்க வேண்டும். எந்த வித சுயநலமும் இல்லாமல் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக சில தியாகங்களை செய்து உழைக்க வேணடும்.

பார்க்கலாம்
இதை செய்தால் வெற்றி பெற முடியும். இரு தேர்தல்கள் நடத்தினால் நல்லதுதான். நேரம், பணம் இவையெல்லாம் மிச்சமாகும் என்பதால் அதுபோன்று நடத்தலாம். ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்து கொண்டே இருந்தால் தேர்தலுக்காக மக்களை சந்திப்பதிலேயே நேரம், காலம் எல்லாம் போய்விடும். ஒரே நேரத்தில் இரு தேர்தல்களை நடத்த அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தர வேண்டும். அடுத்த ஆண்டுக்குள் கட்சி தொடங்குவது குறித்து பார்க்கலாம்.

அறிவிப்பேன்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் நான் போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்து நான் அறிவிப்பேன்.

கூறமாட்டேன்
தமிழகத்தில் ஊழல் நிறைந்துள்ளது என்று அமித்ஷா கூறியிருக்கிறார் என்றால் அவரது பார்வைக்கு என்ன தகவல்கள் போய் சேர்ந்தன என்பது குறித்து எனக்கு தெரியாது. அதை பற்றி நான் எதையும் கூறவில்லை என்றார் ரஜினி.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications