நேரம் வரட்டும்.. ரஜினியின் கட்சி தொடக்கம் அறிவிப்புக்காக மீண்டும் காத்திருக்கும் ரசிகர்கள்!
அரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரமில்லை என ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
சென்னை: அரசியல் களத்தில் இறங்க இப்போது அவசரமில்லை என ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் அரசியல் செய்வதற்கு இன்னும் காலம் இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அரசியல் பிரவேசம் குறித்து ஒவ்வொரு முறை ஒவ்வொரு விதமாக ரஜினிகாந்த் பேட்டி அளித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலை குறித்து ரஜினியின் இந்த குழப்பமான கருத்துக்கள் அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போர் வரட்டும்னு காத்திருக்கேன்
அதேபோல் அண்மையில் ரசிகர்களை சந்தித்து உரையாடல் நிகழ்வை நடத்தினார் ரஜினிகாந்த். அப்போது, கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும் போருக்காக காத்து இருக்கிறோம் என்றும் கூறினார். போர் வரும் வரை அமைதி காப்போம் என்று கூறினார்.

தமிழ்நாட்டுல சிஸ்டம் சரியில்லை
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்று பேட்டி அளித்தார். இதன் காரணமாக ரசிகர்கள் அனைவரும் போருக்கான நேரம் வந்துவிட்டது என்று நினைத்தனர். சிலர் ரஜினி கட்சி தொடங்கிவிட்டார் என்று கூறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பலரும் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதாக கூறினார்.

நேரம் வரும்
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் அரசியலுக்கு வரவேண்டிய அவசரம் தற்போது இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் களத்தில் இறங்க காலம் இருக்கிறது என்றும் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்று நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

பிறந்தநாள் அன்று அறிவிப்பாரா?
இந்த நிலையில் அவர் பேட்டியின் போது பிறந்த நாளில் போது ரசிகர்களை சந்திக்க போவதாக கூறினார். அவர் இந்த ரசிகர்களை சந்திக்கும் திட்டம் அரசியல் பிரவேசத்துக்கும் போடும் முன்னோட்டம் என்று கூறப்படுகிறது.
வழக்கம் போல காத்திருப்பு தொடரும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications