ராஜீவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வார நிபந்தனை சிறைவிடுப்பு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் சிறைவிடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய 2 வார சிறை விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் தம்மை ஒரு மாதம் பரோலில் விடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். சொத்து விவகாரத்தில் பாகப்பிரிவினை செய்ய பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டியுள்ளது, பத்திரப்பதிவு செய்தல் உள்ளிட்டவற்றிற்காக இந்த பரோலை ரவிச்சந்திரன் கோரி இருந்தார்.

பேரறிவாளன் போல தமக்கும் உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் ரவிச்சந்திரன் கோரிக்கை விடுத்தார். ரவிச்சந்திரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி தமிழக அரசு, சிறைத்துறையும் தொடர்ந்து பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் இன்று நிபந்தனைகளுடன் கூடிய 2 வார சிறை விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
யாரிடமும் பேசக்கூடாது, எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது, மீடியாக்களை சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications