6 மாதம் பரோல் கேட்டு நளினி ஹைகோர்ட்டில் மனு- மகள் திருமணத்திற்கு லண்டன் செல்வதாக தகவல்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மகளின் திருமண ஏற்பாட்டிற்காக லண்டன் செல்ல பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி 6 மாத பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனை பரோலில் விட வேண்டும் என்று அவருடைய தாயார் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில் அதன் மீதான பரிசீலனையை அரசு செய்து வருகிறது.

20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்க வேண்டும் என்று நளினி உயர்நீதிமன்றத்திற்கும், மகளிர் ஆணையத்திடமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தன்னுடைய மகள் திருமண வயதிற்கு வந்துவிட்டதால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நளினி கோரியிருந்தார். ஆனால் நளினியின் அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டன.
இந்நிலையில் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் செய்ய லண்டன் செல்ல வேண்டி இருப்பதால் 6 மாதம் பரோல் கேட்டு நளினி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நளினியின் கணவர் முருகன் ஜீவசமாதிக்கு அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications