7 பேர் விடுதலைக்கு தடை: சென்னையில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழக காங்கிரஸார்
சென்னை: சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை தமிழக காங்கிரஸார் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் அறிவித்தார். இந்நிலையில் அந்த 7 பேரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேட்ட தமிழக காங்கிரஸார் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை சின்னமலை அருகே இருக்கும் ராஜீவ் காந்தி சிலைக்கு காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த தீர்ப்பை அவர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடந்த கொண்டாட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இது குறித்து கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் தமிழக அரசு சட்டப்படி உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதை வரவேற்று காங்கிரஸ் கட்சியினர் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்கிறோம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications