ராஜீவ் கொலைக் குற்றவாளிகளுக்கு தூக்கு வழங்க வேண்டும் என்பதே காங். கருத்து: நாராயணசாமி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப் பட்டு வேலூர் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என அந்த தீர்ப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜீவ் கொலை தொடர்பாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
ஆனால், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் உத்தரவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விடுதலை உத்தரவுக்கு இடைக்காலத் தடை பெறப்பட்டது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக புதுவையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியதாவது :-
தமிழக அரசு கொலைக்கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்தலை கருத்தில் கொண்டு ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார். மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் கருத்து' என இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications