ராஜிவ் வழக்கு: பேரறிவாளன் மனு தள்ளுபடி

ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், தடா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், ராஜிவ் கொலை வழக்கின் பின்னணியில் உள்ள சதித் திட்டங்களை விசாரணை செய்வதற்காக சிபிஐயின் சிறப்பு புலனாய்வு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை கால தாமதமாக நடைபெறுவதால் நான் பாதிக்கப்பட்டு வருகிறேன்.
சிபிஐ நடத்தும் இந்த விசாரணை முறையாக நடைபெற்றால் இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளியே வரும். இது தவிர, பெயர் குறிப்பிடாத சில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதால் விசாரணை சரியாக நடைபெறவில்லை.
விசாரணை செய்யப்படாதவர்களை விசாரணை செய்ய வேண்டும். பல்நோக்கு விசாரணை முகமையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இம்மனு நீதிபதி என்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications