தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: ராமகோபாலனுக்கு போலீஸ் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

Rama. Gopalan provided police protection as terrorists target him
சென்னை: தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் ராமகோபாலனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்து இயக்க தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன் கடந்த 4ம் தேதி சிக்கினான். அவனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலை வைத்து ஆந்திர மாநிலம் புத்தூரில் தங்கியிருந்த பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தீவிரவாதிகளான அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சில ஆவணங்கள் மற்றும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்து இயக்க தலைவர்கள் சிலரை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்து இயக்க தலைவர்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராமகோபாலன் மற்றும் அவரது அலுவலகத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் முக்கிய தலைவர்களுக்கும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள இந்து இயக்க தலைவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+