திமுக, அதிமுக மது கூட்டணியை மக்கள் மண்ணை கவ்வ வைக்கப்போவது உறுதி: ராமதாஸ்
சென்னை: வருகிற சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக மது கூட்டணியை தமிழக மக்கள் மண்ணை கவ்வ வைக்கப்போவது உறுதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கான மயிலாட கண்டிருந்த வான்கோழியைப் போல, தேர்தலில் வெற்றி பெற்றால் நாங்களும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என்று ஆறாவது முறையாக தி.மு.க. வாக்குறுதி அளித்துள்ளது. அதேநேரத்தில் அக்கட்சியைச் சேர்ந்த மது ஆலை அதிபர்கள் அ.தி.மு.க. அமைச்சருடன் கூட்டணி அமைத்து, கூடுதல் லஞ்சம் கொடுத்து தங்கள் தயாரிப்புகளை அதிக அளவில் வாங்க வைத்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது. திமுகவின் இத்தகைய மது எதிர்ப்பு நிலை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 11 மது ஆலைகளும், 7 பீர் ஆலைகளும் உள்ளன. தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுவகைகள் இந்த ஆலைகளில் இருந்து தான் கொள்முதல் செய்யப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை திமுகவினர் மற்றும் திமுகவினரின் ஆதரவாளர்களுக்கு சொந்தமானவை என்பதையும், மொத்த மது உற்பத்தியில் பாதிக்கும் கூடுதலாக இந்த ஆலைகளில்தான் நடைபெறுகிறது என்பதையும் கடந்த காலங்களில் ஆதாரங்களுடன் பா.ம.க. அம்பலப்படுத்தியது.
இத்தகைய சூழலில் கடந்த 2015 - 16 ஆம் ஆண்டில் டாஸ்மாக் நிறுவனத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகளில் 56 விழுக்காடும், பீர் வகைகளில் 81 விழுக்காடும் தி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டவை என்று இன்றைய நாளிதழ் ஒன்றில் புள்ளி விவரங்களுடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் 27.78 கோடி மது பெட்டிகளை டாஸ்மாக் கொள்முதல் செய்துள்ளது.
அவற்றில் 14.08 கோடி பெட்டிகள், அதாவது 50.68 விழுக்காடுதிமுகவினர் நடத்தும் மது ஆலைகளிலிருந்து வாங்கப்பட்டவையாகும். இதே காலத்தில் 13.62 கோடிபீர் பெட்டிகள் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன.அவற்றில் 8.38 கோடிபெட்டிகள் அதாவது 61.52% திமுக ஆதரவு ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. திமுக ஆதரவு நிறுவனங்களில் இருந்து அதிக அளவில் மது கொள்முதல் செய்யப்பட்டதற்கான காரணமும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுகொள்முதல் செய்யப்படும்போது ஒரு பெட்டி மதுவுக்கு 50 ரூபாயும், பீருக்கு 30 ரூபாயும் லஞ்சமாக வாங்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அத்துடன் அமைச்சருக்கு வழங்குவதற்காக ஒரு பெட்டிக்கு கூடுதலாக ரூ.15 வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதை திமுக ஆதரவு மது ஆலை அதிபர்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டதால் அவர்களிடமிருந்து கூடுதலாக மது மற்றும் பீர் வகைகளை கொள்முதல் செய்ய துறை மேலிடம் ஆணையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த புள்ளி விவரங்களின் படி பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் மது கொள்முதல் செய்வதற்காக திமுக மது ஆலை அதிபர்கள் ரூ.1291.90 கோடியை ஆட்சியாளர்களுக்கு லஞ்சமாக கொடுத்திருக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு கிட்டத்தட்ட 40,000 கோடி வருமானம்கிடைத்திருக்கிறது.
அதே நேரத்தில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக மது ஆலைகள் உற்பத்தி செய்தமதுவின் மூலம் மட்டும் சுமார் 5.50 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தங்களுக்கு ரூ. 40,000 கோடிவருமானம் வேண்டும் என்பதற்காக ஐந்தரை லட்சம் பேர் உயிரிழப்பதையும், அரசியல் எதிரியான அ.தி.மு.க.வுடன் மது வணிகக் கூட்டணி அமைத்துக் கொண்டு ரூ.1291 கோடி லஞ்சம் தருவதையும் குற்றமாக கருதாத தி.மு.க. தலைமை தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தப் போகிறதாம். தி.மு.க.வின் சொல்லுக்கும், செயலுக்கும் எவ்வளவு முரண்பாடு?அ.தி.மு.க.வாக இருந்தாலும், தி.மு.க.வாக இருந்தாலும் மது விற்பனையில் எந்த வித்தியாசமும் கிடையாது.
தங்கள் ஆதரவு மது ஆலைகளின் வருவாய் தான் முக்கியமே தவிர, மக்கள் நலனோஅல்லது தர்ம நியாயங்களோ முக்கியமில்லை. திமுக ஆட்சியின் போது அதிமுக மது ஆலைகள்லஞ்சம் தருவதும், அதிமுக ஆட்சியின் போது திமுக மது ஆலைகள் லஞ்சம் தருவதும் எழுதப்படாத சட்டங்கள். இரு கட்சிகளும் அரசியலில் தனித்தனி அணியாக இருந்தாலும் மது உற்பத்தி மற்றும் விற்பனையில் அசைக்க முடியாத அளவுக்கு வலிமையான கூட்டணி அமைத்துள்ளன. இப்படிப்பட்டதி.மு.க. மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று கூறுவதை நகைச்சுவையாக மட்டுமே பார்க்க முடியும்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி ஆறாவது முறையாக திமுகவின் மதுவிலக்கு அறிவிப்பை கருணாநிதி வெளியிட்டார். அது குறித்து அப்போது கருத்து தெரிவித்த நான், திமுகவுக்கு உண்மையாகவே மது விலக்குக் கொள்கையில் அக்கறை இருந்தால் திமுகவினர் நடத்தும் மது ஆலைகளை மூட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுதிய கடிதத்திலும் இதை வலியுறுத்தியிருந்தார்.
ஆனால், அதை ஏற்காத திமுக மேலிடம், ‘‘ தமிழ்நாட்டில் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் போது திமுக மது ஆலைகளை மூடுவோம். அதுவரை மதுஆலைகளை நடத்தி மக்களை சீரழிப்போம்'' என்று வித்தியாசமான விளக்கத்தை அளித்தது. கடந்த ஆண்டு ஜூலையில் திமுக மது ஆலைகளை மூடியிருந்தால் தமிழகத்தில் பாதி மதுவிலக்கு நடைமுறைக்கு வந்திருக்கும்; கடந்த எட்டரை மாதங்களில் 70 ஆயிரம் இறப்புகள் தடுக்கப் பட்டிருக்கும். ஆனால், அதற்குத் தயாராக இல்லாத திமுக வந்த வரை வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஆளுங்கட்சிக்கு லஞ்சத்தை வாரி வழங்கியது. இதன்மூலம் திமுகவின் உண்மை முகம் அம்பலமாகிவிட்டது. இனி மது ஒழிப்பு பற்றியோ, ஊழல் ஒழிப்பு பற்றியோ பேசும் தகுதி திமுகவுக்கு இல்லை. அடுத்த மாதம் நடைபெறும் தேர்தலில் திமுக, அதிமுக மது கூட்டணியை தமிழக மக்கள் மண்ணை கவ்வ வைக்கப்போவது உறுதி. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக்












Click it and Unblock the Notifications