மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

Subscribe to Oneindia Tamil

மத்திய அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தொடர்வண்டித்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு அவற்றை நிறைவேற்ற வேண்டியது அமைச்சகத்தின் கடமை ஆகும். இக்கடமையை நிறைவேற்ற தவறியதற்காக தண்டிக்கப்பட வேண்டியது தொடர்வண்டித் துறை அமைச்சகம் தானே தவிர மக்கள் அல்ல. தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படவுள்ள திட்டங்களில் மிகவும் முக்கியமானது சத்தியமங்கலம்& பெங்களூர் தொடர்வண்டிப்பாதை திட்டம் ஆகும். 260 கி.மீ. நீளத்திற்கான இத்திட்டத்தை ரூ13,951 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

1996&97 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்தபோது இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

Ramadoss condemns central government for cancelling Tamilnadu rail projects

கடந்த 2002ஆம் ஆண்டில் பா.ம.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்களும், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அப்போதைய தொடர்வண்டித் துறை அமைச்சர் நிதிஷ்குமாரை சந்தித்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருந்த இத்திட்டம் இப்போது சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் காரணம் காட்டி அடியோடு ரத்து செய்யப்பட இருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விரைந்து நடவடிக்கை தேவை:

தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படவுள்ள திட்டங்கள் தவிர மேலும் பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. திண்டிவனம்&நகரி இடையிலான புதிய பாதை திட்டம், மதுரை மற்றும் போடி இடையிலான அகலப் பாதை திட்டம் ஆகியவற்றுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் அத்திட்டப்பணிகள் பாதியில் நிற்கின்றன.

சென்னையிலிருந்து கடலூருக்கு கிழக்குக் கடற்கரை வழியாக புதிய பாதை அமைக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இத்திட்டங்களுக்கு மாநில அரசு நிதி உதவி செய்ய மறுப்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகி றது. மொரப்பூர்&தருமபுரி இணைப்புப்பாதை திட்டத்திற்கு இன்னும் அனுமதி அளிக்கப்பட வில்லை. பல்வேறு தொடர்வண்டித் திட்டங்கள் முடக்கப்பட்டதாலும், அறிவிக்கப் பட்ட திட்டங்கள் ரத்து செய்யப்படுவதாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

எனவே, ரூ.19,500 கோடி மதிப்பிலான தொடர்வண்டித் திட்டங்களை ரத்து செய்யும் முடிவை கைவிடுவதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொடர்வண்டித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை விரைந்து செயல்படுத்தி முடிக்க தொடர்வண்டித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+