மீட்புப் படையினருக்கு ஜெ. நடத்திய பாராட்டு விழா.. சந்தேகமாக இருக்கிறது: ராமதாஸ்
சேலம்: சென்னை மவுலிவாக்கம் 11 அடுக்கு மாடிக் குடியிருப்பு விழுந்து அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் அழுகுரல் நிற்பதற்கு முன்பாகவே மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு விழா நடத்தி பரிசளித்திருப்பது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சேலம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரின் அழுகுரல் ஓய்வதற்கு முன்பாகவே, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்தியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டட ஊழலில் அதிகாரிகளுக்கு பங்கு இருக்கிறது என்றார் அவர்.
நேற்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் அதிகாரிகள் பலருக்கு தனது கையால் பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதற்கான விழா நேருஉள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications