ஆர்வக்கோளாறு நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: கமல் குறித்து ராமதாஸ்
சிலரின் ஆர்வக்கோளாறு நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று கமல் குறித்து ராமதாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒரு சிலரின் ஆர்வக்கோளாறு நடவடிக்கைகள் தமிழக மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இன்று பெங்களூருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை காவிரி பிரச்னை தொடர்பாக சந்தித்தார். அந்த சந்திப்பில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் கூறுகையில், காவிரி பிரச்னை குறித்து பேசி நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். கமலின் இந்தக் கருத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கும் ஜோரா கைத்தட்டுங்க 2!
— Dr S RAMADOSS (@drramadoss) June 4, 2018
காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு... காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் கமலஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும்!
இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இதற்கும் ஜோரா கைத்தட்டுங்க! காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு... காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் கமலஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும் என்று பதிவிட்டுள்ளார்.
கர்நாடக முதலமைச்சரை கமலஹாசன் இன்று சந்தித்து காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்துகிறார்: செய்தி - காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும்!
— Dr S RAMADOSS (@drramadoss) June 4, 2018
அதேபோல இன்னொரு ட்விட் பதிவில், கர்நாடக முதலமைச்சரை கமலஹாசன் இன்று சந்தித்து காவிரி சிக்கல் குறித்து பேச்சு நடத்துகிறார்: செய்தி - காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்று பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications