தேர்தலில் வெற்றி பெற ராஜபக்சேவுக்கு மோடி வாழ்த்து: ராமதாஸ் வருத்தம்!
சென்னை: இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கும் மோடியின் செயல் தமக்கு மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நேபாள தலைநகர் காத்மண்டுவில் நேற்று தொடங்கிய சார்க் அமைப்பின் 18 ஆவது மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையில் வெகுவிரைவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவிருப்பதாகவும், அதில் தற்போதைய அதிபர் மகிந்த இராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். இந்தியப் பிரதமரின் இந்த பேச்சு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
உலக நாடுகளும், உலகத் தமிழர்களும் கொடுத்த தொடர் நெருக்கடி காரணமாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு ஆணையிடப் பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு இலங்கை அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், இராஜபக்சே எப்படியாவது தண்டிக்கப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டியவரான இராஜபக்சே, இலங்கை அதிபர் தேர்தலில் தொடர்ந்து 3 வது முறையாக வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
இதன்மூலம் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளையும் பிரதமர் நரேந்திர மோடி புண்படுத்திவிட்டார். இராஜபக்சே தமது செயலுக்காக இதுவரை வருந்தவில்லை. மாறாக, இலங்கையின் போர்க்குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையரின் விசாரணைக்கு ஆணையிடப் பட்டதை பெரும் குற்றமாக அவர் சித்தரித்து வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications