''சிறு நரியுடன் கூட்டணி வைத்த சிங்கக்குட்டி''... தேமுதிக மீது பாய்ந்து படாரென பம்மிய பாமக!
சென்னை: சிங்கக்குட்டிகள் சிறு நரியிடம் பிச்சை கேட்காது என்று வீராவேசமாக முழங்கியிருந்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். ஆனால் இன்று வேறு வழியில்லாமல் தேமுதிகவிடம் பணிந்து போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சேலம், கள்ளக்குறிச்சி தொகுதிகள் தொடர்பாக தேமுதிகவிடம் பணிந்து போக முடியாது என்பதைத்தான் தர்மபுரியில் நடந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிமுகக் கூட்டத்தின்போது டாக்டர் ராமதாஸ் கோபமாக இப்படிப் பேசியிருந்தார்.

தர்மபுரி கூட்டத்தில் அவர் பேசுகையில், நீங்கள் சிங்கக் குட்டிகள். சிங்கக் குட்டிகள் சிறு நரியிடம் பணிந்து போகாது. அந்த நிலைக்கு ஆளாகாது என்று பேசியிருந்தார். இதன் மூலம் தேமுதிகவை அவர் சீண்டிப் பார்த்தார்.
பதிலுக்கு தேமுதிகவினரும் இப்படிப் பிராண்டியிருந்தனர். சிங்கம்னா சிங்கிளா நிக்க வேண்டியதுதானே, எதுக்கு கூட்டணிக்கு அலையனும் என்று அவர்களும் காட்டமாக பதிலடி கொடுத்திருந்தனர்.
இப்படியாக சூடான விவாதம் வெடித்திருந்த நிலையில்தான் இன்று ராஜ்நாத் சிங் முன்னிலையில் 'சிறு நரி' விஜயகாந்த்துடன், 'சிங்கக்குட்டி' அன்புமணி அருகருகே அமர்ந்து ஜோராக காணப்பட்ட காட்சியை தமிழகம் கண்டு ரசித்தது. அதை விட முக்கியமாக 'சிறு நரி' விஜயகாந்த்துக்கு 'சிங்கக்குட்டி' அன்புமணி பொன்னாடை வேறு போர்த்தி சிரிக்கச் சிரிக்கப் பேசி அசத்தியும் விட்டார். கூடவே பாமகவின் மற்ற சிங்கக்குட்டிகளான ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோரும் புன்னகை தவழ நின்றிருந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications