ராமதாசை மெய்சிலிர்க்க வைத்த ஜெயலலிதா நடவடிக்கை!
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நட்ராஜ் மீண்டும் சேர்ப்பு என வெளியாகியுள்ள செய்திகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், ஜெயலலிதாவின் ஜனநாயகமும், புலனாய்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது என கேலி செய்துள்ளார்.
பாமக நிறுவனர் டிவிட்டர் மூலம் அரசின் நடவடிக்கைகள் குறித்து கொடுத்துள்ள கமெண்ட் சிலவற்றை பாருங்கள்:
பொதுப்பணித்துறை செயலருக்கு கூடுதலாக மின்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து கருத்து கூறியுள்ள ராமதாஸ், அம்மாவின் ஆணைக்கிணங்க செம்பரம்பாக்கம் சீரழிவுக்கு வழிவகுத்ததற்கு பரிசு போலும்! என கூறியுள்ளார்.

திருடன் கையில் சாவி
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கையா நாயுடு கூறியது பற்றி ராமதாஸ் கூறுகையில், இதற்கு பெயர் தான் திருடன் கையில் சாவியை கொடுப்பதோ? என தெரிவித்துள்ளார்.
|
புல்லரிப்பு
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நட்ராஜ் மீண்டும் சேர்ப்பு என வெளியாகியுள்ள செய்திகுறித்து ராமதாஸ் கூறுகையில், ஜெயலலிதாவின் ஜனநாயகமும், புலனாய்வும் மெய்சிலிர்க்க வைக்கிறது என கேலி செய்துள்ளார்.

எல்லாம் கொடுத்தார்
ஜெயலலிதா எனக்கு எல்லாம் கொடுத்தார் என்று ஆர்.நட்ராஜ் தெரிவித்ததை கேலி செய்துள்ள ராமதாஸ், முதலில் நீக்க உத்தரவும், பின்னர் சேர்ப்பு உத்தரவும் கொடுத்ததை சொல்கிறார் போலிருக்கிறது என்று விளாசியுள்ளார்.

உடன்குடி மின்நிலையம்
உடன்குடி மின்நிலைய டெண்டர் பெற எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று வெளியாகியுள்ள தகவல் பற்றி, "தானாக முன்வந்து தலையை கொடுக்க யார் தான் தயாராக இருப்பார்கள்?" என கூறியுள்ளார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications