எடப்பாடி அளவுக்கு மோடி பெரிய தலைவர் இல்லை.. என்ன சொல்ல வருகிறார் ராமதாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமி அளவுக்கு பெரிய தலைவரா என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பிரதமர் மோடி நேற்று சென்னை வருகை தந்திருந்தபோது, இசெட் பிளஸ் பாதுகாப்பில் உள்ள தலைவர் என்றபோதிலும், அதனால் சென்னை போக்குவரத்திற்கு குந்தகம் ஏற்படவில்லை. போக்குவரத்து சீராக இருந்தது. இதுகுறித்து சில பத்திரிகைகள் பாராட்டி எழுதியுள்ளன.

இதைத்தான் ராமதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே எடப்பாடி பழனிச்சாமி செல்லும்போதும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளநிலையில் இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

எடப்பாடி பெரிய தலைவர்

பிரதமர் மோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லை: செய்தி - நெரிசல் ஏற்படுவதற்கு அவர் என்ன எடப்பாடி அளவுக்கு பெரிய தலைவரா?

முதல்வர் துறை

தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் திறக்கப்படுவதற்கு முன்பே விரிசல்: முதலமைச்சரின் துறை அல்லவா... அப்படித் தான் இருக்கும்!

ஊழலுக்கு ஏற்ப விரிசல்

தஞ்சாவூரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் திறக்கப்படுவதற்கு முன்பே விரிசல்: எவ்வளவு அதிக ஊழலோ, அவ்வளவு வேகமாகத் தானே விரிசல் ஏற்படும்!

எப்படி இருந்தவர்

ஜி.எஸ்.டி.யை எதிர்க்கட்சிகள் எதிர்க்கக்கூடாது: நிதிஷ்குமார்- எப்படி இருந்த நிதிஷ்குமார்... இப்ப இப்படி ஆகிவிட்டாரே?

அமைச்சருக்கு கண்டனம்

காலணிகளை உதவியாளரை தூக்கி வர வைத்த மத்திய அமைச்சர் ஜூயல் ஓரம்: செய்தி - கண்டிக்கத்தக்கது. மனிதர்களை மதிப்பவரே மந்திரி!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK founder Ramadoss says, Edappadi Palanisamy is bigger leader than PM Modi, in a lighter tone.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X