இந்தி இல்லாமல் வேலைவாய்ப்பு இல்லையா? பானிப்பூரி விக்கறவங்களும் அப்படிதான் சொல்றாங்க-ராமதாஸ் பொளேர்
இந்தி மொழி இல்லாமல் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் வெங்கையாவின் கருத்துக்கு பாமக நிறுவனர் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை: இந்தி மொழி, தமிழக மீனவர் விவகாரம், ம.பி. அமைச்சரின் பதவி பறிப்பு ஆகிய விவகாரங்களில் பாமக ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இந்தி மொழி குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பேசுகையில் இந்தி தேசிய மொழியாகும். இந்திதான் நமது தாய்மொழி. அதுதான் நமது அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும்.
நாம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது, நம்மை ஆங்கிலேய மனப்பான்மை கொண்ட மக்கள் போல நினைத்துக்கொள்கிறோம். இது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல. இந்தி நமது தேசிய மொழி. அது இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை. வேலைவாய்ப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று தங்களை வளைத்துக் கொள்வது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

தொடர் சர்ச்சை
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும், மத்திய அமைச்சர்களும், எழுதும்போதும் பேசும்போதும் இந்தியை கட்டாயம் பயன்படுத்தவேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஏப்ரல் மாதம் செய்திருந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆதரவு தெரிவித்து கருத்து கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
|
மீண்டும் சர்ச்சை
இந்நிலையில் இந்தி மொழிதான் இந்தியாவின் தாய்மொழி என்று அவர் மீண்டும் கூறியிருப்பது குறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இந்தி தேசிய மொழி. அது இல்லாமல் வேலைவாய்ப்பு, வளர்ச்சி இல்லை: வெங்கையா நாயுடு- ஆமாம்... பானிபூரி விக்கிறவங்களும் அப்படித்தான் சொல்றாங்க! என்று குறிப்பிட்டுள்ளார்.
|
தமிழக மீனவர்கள்
தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ராமதாஸ் குறிப்பிடுகையில், 18 தமிழக மீனவர்கள் சிங்களப்படையால் கைது: செய்தி - ஆஹா... அடிமை முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுத மேலும் ஓர் அரிய வாய்ப்பு! என்றார்.
|
தமிழகத்திலும் நிறைய...
தேர்தல் செலவு கணக்கில் தவறான செய்தி தகவல் தெரிவித்ததாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது. இதனால் அவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. இதுகுறித்து ராமதாஸ் கூறுகையில், தேர்தல்செலவை மறைத்த மத்திய பிரதேசஅமைச்சரின் பதவிப் பறிப்பு- 3 ஆண்டு போட்டியிடத் தடை: தமிழகத்தில் இப்பட்டியலில் சேர்க்கப்படவேண்டியவர்கள் பலர்! என்று குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications