For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரமணன் சார், மன்டே ஸ்கூல்: கவலை வேண்டாம் என்கிட்ட இன்னும் 2 புயல் இருக்கு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் பள்ளிக் குழந்தைகள் வயிற்றில் பால் வார்க்கும் வகையில் ஒரு மீம் ஃபேஸ்புக்கில் உலா வருகிறது.

முன்பு எல்லாம் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தால் ஆமா, இவர் இப்படித் தான் சொல்வார். ஆனால் மழையும் பெய்யாது, பள்ளிக்கு விடுமுறையும் விட மாட்டாங்க என மாணவ, மாணவியர் அலுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் தான் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்க்கும் என்ற ரமணனின் வாக்கு பலித்தது. கனமழையால் தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் வரும் 22ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

Another Cyclone on the way :OPic: Praveen Kumar

Posted by Kaatu Poochi on Thursday, November 19, 2015

மழையின் தீவிரம் குறைந்துள்ளதையடுத்து வரும் திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்ல வேண்டுமே என்ற கவலையில் மாணவர்கள் உள்ளனர். பெற்றோர்களோ அம்மாடி திங்கட்கிழமை பள்ளிகளை திறக்கிறார்களே புண்ணியவான்கள் என்று மகிழ்ச்சியாக உள்ளனர்.

இந்த சூழலில் மாணவர்களின் வயிற்றில் ரமணன் பால் வார்ப்பது போன்று ஒரு மீம் ஃபேஸ்புக்கில் பிரபலம் ஆகியுள்ளது.

English summary
A meme is doing rounds in Facebook about Chennai meteorological centre director Ramanan giving good news to school students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X