அன்வர் ராஜா வீடா இது? கட்சிக்காரர்கள் வந்து எத்தனை நாளாச்சு! இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
ராமநாதபுரம்: அதிமுகவின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அன்வர் ராஜாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் சாரை சாரையாக நேரில் சென்று வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதனால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீடு மீண்டும் பரபரப்பாக காணப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரர்கள் யாரும் அன்வர் ராஜா வீட்டை எட்டிக்கூட பார்க்காத நிலையில் இப்போது மீண்டும் லைம் லைட்டிற்குள் வந்துள்ளார் அன்வர் ராஜா.

கட்சிக்காரர்கள் வாழ்த்துச் சொல்வதற்காக தொடர்ந்து வருவதும் போவதுமாக இருப்பதால் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டில் இருந்தவாறு அவர்களை சந்திப்பதில் அலாதி மகிழ்ச்சி கொள்கிறார் அன்வர் ராஜா. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமி தொடங்கி அம்மாவட்டத்தின் நகர, பேரூர், ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் வரை அன்வர் ராஜாவை அவரது வீடு தேடிச்சென்று வாழ்த்தியுள்ளனர்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதை போல் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வீட்டில் கட்சிக்காரர்களை திரளாக அமர வைத்து நடுநாயகமாக இருக்கை போட்டு அமர்ந்து அவர்களிடம் கலந்துரையாடியிருக்கிறார் அன்வர் ராஜா.
1986-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் எம்.ஜி.ஆர். முன்னிலையில் பேச வாய்ப்பளிக்கப்பட்ட 4 நபர்களில் அன்வர் ராஜாவும் ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த மாநாடு முடிந்த ஒரே வாரத்தில், அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக அன்வர் ராஜாவை நியமித்து எம்.ஜி.ஆர். இன்ப அதிர்ச்சி கொடுத்ததும் கடந்த கால வரலாறு.

இப்படி அதிமுகவின் ஆரம்பக் கால சீனியரான இவர் இந்நேரம் கட்சியில் இருந்திருக்க வேண்டிய இடமே வேறு. ஆனால் இப்போது தான் இவருக்கு அமைப்புச் செயலாளர் பதவியே தரப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடந்த காலத்தில் அவர் பேசிய பேச்சுக்கள் தான்.
இதனிடையே உட்கட்சி விவகாரத்தில் கருத்து ஏதும் சொல்லாமல் சற்று பொறுமை காத்திருந்தால் தமிழ் மகன் உசேன் வசிக்கும் அதிமுக அவைத்தலைவர் பதவியிலேயே அமர்ந்திருக்கலாம் என்ற நினைப்பும் அவ்வப்போது அன்வர் ராஜாவை எட்டிப்பார்ப்பதாக தெரிவிக்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications