டி.வி.யைக் கொடுத்து குடும்பங்களை கெடுத்தார் கருணாநிதி: ராமராஜன்
மதுரை: உடன் பிறந்த அண்ணனை சேர்க்காத ஸ்டாலின், மகன்களை ஒன்று சேர்க்காத கருணாநிதி எப்படி மக்களை ஒன்று சேர்ப்பார்கள்? என்று நடிகர் ராமராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை திருமங்கலம் தேவர் சிலை அருகே அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நடிகர் ராமராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,

ஜெயலலிதா
இந்தியாவுக்கு கிடைத்த ஒரே வீராங்கனை ஜெயலலிதா தான். அவரின் 4 ஆண்டு கால ஆட்சியை பற்றி நாடே பாராட்டிப் பேசுகிறது.

ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகளாக எங்கு இருந்தாராம். அவர் என்னவென்றால் முடியட்டும், விடியட்டும் என்கிறார். அவரது அண்ணனோ நிற்கட்கும், முடியட்டும் என்கிறார்.

கருணாநிதி
உடன் பிறந்த அண்ணனை சேர்க்காத ஸ்டாலின், மகன்களை ஒன்று சேர்க்காத கருணாநிதி எப்படி மக்களை ஒன்று சேர்ப்பார்கள்?

விஜயகாந்த்
விஜயகாந்த் என்ன பேசுகிறார் என தெரியவில்லை. சினிமாவில் மவுசு போனதால் அரசியலுக்கு வந்தார் அவர். அவர் என்ன மக்களுக்கு சேவை செய்யவா வந்தார்?

மோடி
உலகம் பாராட்டும் மோடி ஜெயலலிதாவை பாராட்டுகிறார். ஜெயலலிதா மக்களுக்காக அறிவித்த திட்டங்களை யாராலும் மறக்க முடியாது.

நிலம்
2 ஏக்கர் நிலம் அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தாரே கருணாநிதி, நிலம் கொடுத்தாரா? டி.வி.யை கொடுத்து குடும்பங்களை தான் கெடுத்தார். அம்மாவின் 4 ஆண்டு கால ஆட்சி 400 ஆண்டு கால ஆட்சி ஆகும் என்றார் ராமராஜன்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications