மீண்டும், மீண்டும் மீனவர்களை விரட்டி அடிக்கும் இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடித்து மீண்டும், மீண்டும் இலங்கை கடற்படையினர் தங்கள் அட்டூழியத்தினை அதிகரித்து வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28 ஆம் தேதி முருகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்குச் சென்று மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க கோரியும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 2 ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500க்கும் அதிகமானவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை, 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு படகுகளுடன் கரைக்கு திரும்பினர். ஆனால் இதுகுறித்து மீனவர்கள் யாரும் மீன்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications